ரஸ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலானது என தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் நடவடிக்கைகள் ஜனநாயகக் கொள்கைகளுக்கு நேர் எதிர்மறையானது என குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்யாவின் எதேச்சாதிகார செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி ரஸ்யாவின் எதேச்சாதிகார போரை எதிர்க்கும் வகையில் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.