Home உலகம் ரஷிய படைகளை திணற செய்வதற்காக நீக்கப்பட்ட சாலை வழிகாட்டி பலகை

ரஷிய படைகளை திணற செய்வதற்காக நீக்கப்பட்ட சாலை வழிகாட்டி பலகை

by Jey

போரை முன்னிட்டு ரஷிய படைகளை திணற செய்வதற்காக, சாலை வழிகாட்டி பலகைகள் நீக்கப்பட்டு உள்ளன. தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு உள்ளன. முக்கிய நுழைவு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்காக மணல் மூட்டைகள், டயர்கள் ஆகியவற்றை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

 

இதற்காக ஒரே நாளில் உள்ளூர்வாசிகள் 80 பேர் ஒன்றாக சேர்ந்து அதனை கட்டி எழுப்பி உள்ளனர். இந்த சாலை வழியே பீரங்கிகள் வருவது அறியப்பட்டால், அதுபற்றி அந்த பகுதியில் இருக்கும் மற்றவர்களுக்கு தெரிவிக்கப்படும். பின்பு சோதனை சாவடியில் இருப்பவர்கள் வேறு இடங்களுக்கு செல்வதுடன், ஒரே குண்டுவெடிப்பில் சோதனை சாவடி தகர்க்கப்படும். எதிரிகள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என கூறியுள்ளார்.

கையெறி குண்டுகளை அல்லது துப்பாக்கியால் சுடுவது பற்றி பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ரஷிய பீரங்கிகள் குண்டு வீசினால் அதனை ராணுவம் மற்றும் குடிமக்கள் பிரிவு எதிர்கொள்வதற்கான உயர்மட்ட திட்டமும் வகுக்கப்பட்டு உள்ளது.

பெண்களும், காலியான காக்டெயில் பாட்டில்களை கொண்டு பெட்ரோல் எறிகுண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போர் திட்டங்கள் வகுக்கப்பட்டு ராணுவ பிரிவுகளில் நூற்றுக்கணக்கானோர் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என கூறியுள்ளார். இதுபோன்ற பல போர் யுக்திகளை கையாண்டு ரஷிய படைகளை எதிர்கொள்ளும் முயற்சியில் ராணுவத்துடன் சேர்ந்து பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

222

related posts