100 மில்லியன் டாலர் வாழ்வாதாரப் பொருட்களை உக்கிரேனுக்குக் கொடுத்துள்ள கனேடியப் பிரதமர் ரூடோ , உக்கிரேன் மக்களின் ஆதரவுக்காக தாம் உரத்துக் குரல்கொடுப்போம் என்றார்.
உக்கிரேனுக்கான சர்வதேசப் பேராதரவால் ரஷ்யாவிற்குப் பெரும் தலை குனிவு ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர்
இந்த வாரத்தின் பிற்பகுதியில், ரஷ்ய கப்பல்கள் கனேடிய துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டு நீர்க்கால்வாய்களில் நுழைவது தடை செய்யப்படும் எனவும் இன்று அறிவித்தார் .
ரஸ்யத் தூதரை வெளியேற்ற வேண்டுமென கனேடிய எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.