Home இந்தியா ஆதரவு திரட்டும் நோக்கில் சசிகலா தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம்

ஆதரவு திரட்டும் நோக்கில் சசிகலா தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம்

by Jey

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஆளும் கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்றது. அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளது. கட்சியை பலப்படுத்த, சசிகலாவை சேர்க்க வேண்டும் என, தேனி மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதேநேரத்தில் ஆதரவு திரட்டும் நோக்கில் சசிகலாவும், தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

சசிகலாவை இணைக்கும் முடிவுக்கு, ‘கிரீன் சிக்னல்’ தராமல், அதை புறக்கணிக்கும்படி, அ.தி.மு.க., தலைமையை, பா.ஜ., மேலிடம் அறிவுறுத்தியதாக தகவல்வெளியாகி உள்ளது.
அவரது சுற்றுப்பயணம் குறித்த அறிக்கை, மத்திய உளவுத் துறை தரப்பில், பா.ஜ., மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

அந்த அறிக்கையை தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் சசிகலாவை சேர்க்க, பா.ஜ., மேலிடம், ‘கிரீன் சிக்னல்’ தர மறுத்து விட்டது. அம்முடிவை புறக்கணிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது. அதாவது, சசிகலாவை அ.தி.மு.க., வில் இணைத்தால், தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட ஒரு ஜாதியினரின் ஆதரவு மட்டும் தான் கிடைக்கும். ஆனால்,
மற்ற ஜாதிகளால் பாதிப்பு ஏற்படும்.

குறிப்பாக, தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள, மற்ற இரண்டு ஜாதியினரின் எதிர்ப்பால், அ.தி.மு.க., வுக்கு மட்டுல்ல, அக்கட்சி யுடன் கூட்டணி அமைக்கிற பா.ஜ.,வுக்கும் பலவீனத்தை ஏற்படுத்தும். சசிகலா எந்த ஒரு
தேர்தலிலும் தன் பலத்தை நிரூபிக்கவில்லை.

அவருக்கான ஓட்டு வங்கியை இதுவரை அவரால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால், தினகரன், அ.ம.மு.க., என்ற கட்சியை துவக்கி, ஆர்.கே.நகர் இடைதேர்தலில் வெற்றி பெற்றார்.
லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி என, மூன்று தேர்தல்களை சந்தித்து, இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்டு, 2.5 சதவீதம் ஓட்டுகளை தக்கவைத்துள்ளார். எனவே, அக்கட்சியை லோக்சபா தேர்தல் கூட்டணியில் சேர்த்து, இரண்டு எம்.பி., ‘சீட்’ வழங்கலாம் என்ற ஆலோசனையை, அ.தி.மு.க., இரட்டை தலைமைக்கு, பா.ஜ., மேலிடம்

 

 

 

related posts