Home உலகம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா?

இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா?

by Jey

அமெரிக்காவில் இருக்கும் வெள்ளை வால் மான்களிடம், ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லோவா மாகாணத்தில், வேட்டையாடப்பட்ட வெள்ளை வால் மான்களிடம், கடந்த ஆண்டு சோதனை நடத்தப்பட்டது. அதில், 80 சதவீத மான்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. ஆனால், அந்த சமயத்தில் மான்களின் உடலில் உயிருடன் கூடிய தொற்று கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், நியூயார்க்கின் ஸ்டேடன் தீவில் உள்ள 131 வெள்ளை வால் மான்களிடம், கடந்த ஆண்டு டிசம்பர் 12 முதல், 2022 ஜன., 31 வரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 19 மான்கள், ‘ஒமைக்ரான்’ வகை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து, அமெரிக்காவின் கால்நடை மற்றும் உயிரியல் மருத்துவ பேராசிரியர் சுரேஷ் குச்சிபுடி கூறியதாவது:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மான்களிடம் இருந்து, அந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

related posts