Home இலங்கை நாட்டில் நிலவும் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை

நாட்டில் நிலவும் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை

by Jey

நாட்டில் நிலவும் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, பொது நிறுவனங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிப்பது தொடர்பாக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது

2022, மார்ச் 08 (செவ்வாய்கிழமை) திகதியிடப்பட்ட இது தொடர்பான சுற்றறிக்கையில் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி கையெழுத்திட்டுள்ளார்.

இதன்படி பிற்பகல் 2.30 மணிக்கும் மாலை 4.30 வரைக்குமான காலப்பகுதியில் குளிரூட்டிகளை நிறுத்தி வைக்க பொது நிறுவனங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

கூடுதலாக, அதிகாரிகள் மின்துாக்கிகளுக்கு பதிலாக படிக்கட்டுகளை முடிந்தவரை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

தற்போது பொது நிறுவனங்களுக்குச் சொந்தமாக 75,000 வாகனங்கள் உள்ளன. “ஒரு வாகனம் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் எரிபொருளைச் சேமிக்க முடிந்தால், ஒரு நாளுக்குள் மொத்தம் 75,000 லிட்டர் எரிபொருளைச் சேமிக்க முடியும்” என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அமைச்சர்கள் மற்றும் பொதுத்துறை அதிகாரிகளுக்கு கூடுதல் எரிபொருளுக்கான பணம் செலுத்துவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கூட்டங்கள் மற்றும் பிற நோக்கங்களுக்காக வெளிமாவட்ட அதிகாரிகளை கொழும்பில் உள்ள தலைமை அலுவலகங்களுக்கு அழைப்பதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

related posts