சமீப காலமாக ரொறன்ரோவில் என்றுமில்லா வகையில் போதை மருந்திற்கு அடிமையானோரின் அவலச்சாவுகள் பெருகி வருவது அச்சம் தருகின்றது.
ரொறன்ரோ நகரின் மையப்பகுதியில் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட நான்கு பேர் சமீபத்தில்இறந்ததை அடுத்து, ரொறன்ரோ பொலிசார் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.
கடந்த மார்ச் 4 ந்திகதியிலிருந்து மார்ச் 9 ந் திகதி வரையான நாட்களுக்கிடையே போதைப் பாவனையாளர்கள்4 பேர் மரணித்தும் மற்றும் 9 பேர் மிக அபாயகரமான கட்டத்திலிருப்பதாகவும் ரொறன்ரோ காவல்துறையினர்தெரிவித்துள்ளார்கள்.
போதைப்பொருட்களை, போதை ஊசிகளை பயன்படுத்துவோர் தீவிர எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறும்அளவிற்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாமெனவும் ரொறன்ரோ பொலிஸ் பிரிவினர் பொதுமக்களைஎச்சரித்துள்ளனர்.
கட்டுப்பாடற்று போதையை உட்கொண்ட பிறகு எவராவது நோய்வாய்ப்பட்டால், மருத்துவமனையின் அவசரஅறைக்குச் செல்ல 911 ஐ அழைக்கவும் அல்லது சிகிச்சைக்காக உடனடியாக வாக்–இன் கிளினிக்கிற்குச்செல்லவும் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இந்த சமீபத்திய போதைப்பொருள் பாவனை பற்றிய மேலதிக தகவல் தெரிந்தவர்கள், காவல்துறையை 416-808-5100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், அல்லது குற்றத் தடுப்புபிரிவினரின் அநாமதேயத் தொடர்பான 416-222-8477 (TIPS) என்ற எண்ணிலோ அல்லது ஆன்லைனில்222tips.com லோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.