Home உலகம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளன 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள்

நாட்டை விட்டு வெளியேறியுள்ளன 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள்

by Jey

உக்ரைனில் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

உக் ரைன் நாட் டின் மீது ரஷியா தொடுத் துள்ள போர், அந்த நாட்டு மக் க ளுக்கு பாது காப் பற்ற சூழலை உருவாக்கி உள்ளது. ஒவ் வொரு நாளும் உயிருக்குப் பயந்து கொண்டே இருப் பதை விட இடம் பெயர்ந்து விடுவோம் என கருதி உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து, சுலோவேகியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார் கள். இப்படி இதுவரை 20 லட் சம் பேர் அகதி கள் ஆகி இருக்கிறார்கள்.

பல பெற்றோர்கள் தங்கள் குழந்தை களை அண்டை வீட் டுக் காரர்கள் மற்றும் நண்பர் க ளு டன் அண்டை நாடுகளுக்கு அனுப்பிவைக்கிற பரிதாப நிகழ்வுகளும் அரங் கேறுகின்றன.
இதுதொடர்பாக யுனிசெஃப் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பிராந்திய இயக்குனர் அப்ஷான் கான் கூறியதாவது:-

நாட்டை விட்டு வெளியேறிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிர்ச்சி அடைய வைக்கிறது. குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் நிலைமை எவ்வளவு அவ நம்பிகையானது என்பதை இந்த போர் காட்டுகிறது.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு யுனிசெப் உதவி வருகின்றது. இதுவரை, கிட்டத்தட்ட 70 டன் பொருட்களுடன் ஆறு லாரிகளில் உக்ரைனுக்கு வந்துள்ளன. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு கருவிகள் இதில் அடங்கும்.

உக்ரைனின் மோதல்களால் பாதிக்கப்பட்ட 5 வெவ்வேறு பகுதிகளில் உள்ள 22 மருத்துவமனைகளில் உள்ள 20,000 குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்குப் பயனளிக்கும் வகையில் மருத்துவப் பொருட்களை விநியோகிக்கப்பட்டுள்ளது.

போர் பதற்றத்தின் காரணமாக பெரும்பாலானோர் குடும்பத்துடன் போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, மால்டோவா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்காக யுனிசெஃப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றது.

குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்கிறோம், ஆனால் போர் முடிவுக்கு வர வேண்டும். அமைதி மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றார்.

 

related posts