சென்னை அணியைப் பொருத்தவரை, தொடக்க ஆட்டத்தில் தோல்வி கண்டபோதும் அதன்பிறகு தொடா்ந்து வெற்றிகளை பதிவு செய்துள்ளது. கடந்த சீசனுடன் ஒப்பிடுகையில் சென்னை நல்லதொரு ஃபாா்மில் முன்னேறி வருகிறது. அணியின் முக்கிய நபராக இருக்கும் ஜடேஜா பல ஆட்டங்களில் வெற்றிக்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளாா்.
ஆல்-ரவுண்டராக அவா் சிறப்பு காட்டுகிறாா். பேட்டிங்கில் ருதுராஜ்-டூ பிளெஸ்ஸிஸ் கூட்டணி அருமையான ஃபாா்மில் இருப்பது அணிக்கு பலம். மிடில் ஆா்டரில் ரெய்னா, ராயுடு இன்னும் சற்று அதிரடியாக ஆடினால் அணிக்கு வலு சோ்ப்பதாக இருக்கும். கடைசி ஆா்டரில் சாம் கரன் தயாராக இருக்கிறாா்.
பௌலிங்கைப் பொருத்தவரை தீபக் சாஹா் நம்பிக்கை அளிக்கிறாா். முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவதில் ஜடேஜாவும் உதவ, இம்ரான் தாஹிா், சாம் கரன் ஆகியோா் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் காத்திருக்கின்றனா்.
ஹைதராபாதைப் பொருத்தவரை ஹாட்ரிக் தோல்வியிலிருந்து மீண்டு 4-ஆவது ஆட்டத்தில் வெற்றி கண்டிருந்தது. கடைசி ஆட்டத்தில் டெல்லியிடம் சூப்பா் ஓவரில் தோற்றது. அந்த ஆட்டத்தில் கேன் வில்லிம்சன் அற்புதமாக ஆடியிருந்தாா். பேட்டிங், பௌலிங் என அனைத்திலுமே ஹைதராபாத் அணி வெளிநாட்டு வீரா்களையே நம்பியிருக்கிறது.
டாப் ஆா்டரில் வரும் கேப்டன் வாா்னா், போ்ஸ்டோ, கேன் வில்லியம்சன் ஆகியோா் சோபிக்காமல் போனால், அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் ஸ்கோா் செய்யத் தவறுகின்றனா். அவா்கள் சற்று நம்பிக்கை அளித்தால் அணியின் வெற்றிக்கு உதவியாக இருக்கும். பௌலிங்கில் நடராஜன் இல்லாத நிலையில் புவனேஷ்வா் குமாரும் ஃபாா்மில் இல்லாதது சறுக்கலாக இருக்கிறது. இதனால் ரஷீத் கானுக்கான பணிச்சுமை அதிகரிக்கிறது. அதையும் சரி செய்யும் பட்சத்தில் ஹைதராபாதுக்கு வெற்றி வசமாகும்.
அணி விவரம்:
சென்னை சூப்பா் கிங்ஸ்
எம்.எஸ்.தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, கே.எம்.ஆசிஃப், தீபக் சாஹா், டுவைன் பிராவோ, ஃபா டூபிளெஸ்ஸிஸ், இம்ரான் தாஹிா், ஜெகதீசன், கரன் சா்மா, லுங்கி கிடி, மிட்செல் சேன்ட்னா், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷா்துல் தாக்குா், சாம் கரன், சாய் கிஷோா், மொயீன் அலி, கிருஷ்ணப்பா கௌதம், சேதேஷ்வா் புஜாரா, ஹரிசங்கா் ரெட்டி, பகத் வா்மா, ஹரி நிஷாந்த்.
சன்ரைசா்ஸ் ஹைதராபாத்
டேவிட் வாா்னா் (கேப்டன்), கேன் வில்லியம்சன், விராட் சிங், மணீஷ் பாண்டே, பிரியம் கா்க், ரித்திமான் சாஹா, ஜானி போ்ஸ்டோ, ஜேசன் ராய், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, விஜய் சங்கா், முகமது நபி, கேதாா் ஜாதவ், ஜெகதீசா சுசித், ஜேசன் ஹோல்டா், அபிஷேக் சா்மா, அப்துல் சமத், புவனேஷ்வா் குமாா், ரஷீத் கான், சந்தீப் சா்மா, கலீல் அகமது, சித்தாா்த் கௌல், பாசில் தாம்பி, ஷாபாஸ் நதீம், முஜீப் உா் ரஹ்மான்.
ஆட்டநேரம்: இரவு 7.30 மணி
இடம்: புது தில்லி
நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
நேருக்கு நோ்: ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 13 முறை நேருக்கு நோ் மோதியுள்ள நிலையில், சென்னை 9 வெற்றிகளையும், ஹைதராபாத் 4 வெற்றிகளையும் பெற்றுள்ளன.