Home உலகம் ரஷியாவை கோபப்படுத்தினால்?

ரஷியாவை கோபப்படுத்தினால்?

by Jey

ரஷியாவை கோபப்படுத்தினால், ரஷியாவுடனான அந்த நாடுகளின் உறவு பாதிக்கப்படலாம் என்று அச்சப்படுகின்றன. இதன் காரணமாக, ரஷியா மீது பொருளாதார தடைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க மறுத்துள்ளன.

அதற்கு பதிலாக, மிகவும் ஜாக்கிரதையான வார்த்தைகளை பயன்படுத்தி ரஷியாவை கண்டித்துள்ளன. ஒரு சுதந்திர நாட்டின் மீது அதன் சக்தி வாய்ந்த அண்டை நாடு தாக்குதல் நடத்துவது மனிக்க முடியாத செயல். கிழக்கு நாடுகள் ரஷியாவை ஆத்திரமூட்டும் விதமாக அல்லாமல் அமைதியான முறையில் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா மீதான பொருளாதார தடை நடவடிக்கைகளால் ஐரோப்பிய நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் எரிவாயு பிரச்சினைகளைத் தணிக்க, மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கையை முற்றிலுமாக மத்திய கிழக்கு பகுதியின் ஏறக்குறைய அனைத்து நாடுகளும் நிராகரித்துவிட்டன.

ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து, லாட்வியா, எஸ்டோனியா, பல்கேரியா, ஸ்லோவாக்கியா, குரோஷியா மற்றும் செக் குடியரசு ஆகியவை தங்கள் எரிவாயு பயன்பாட்டில், ரஷியாவிடமிருந்து மூன்றில் இரண்டு பங்கு எரிவாயுவைப் பெற்று வருகின்றன. அதேபோல, ஜெர்மனி, ஆஸ்திரியா, கிரீஸ், இத்தாலி, லிதுவேனியா, போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் தங்கள் எரிவாயு பயன்பாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக ரஷியாவை நம்பியுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக ரஷியா எரிவாயு விநியோகத்தை நிறுத்தினால், மேலே உள்ள அனைத்து நாடுகளும் மிகப்பெரிய எரிசக்தி பிரச்சனையை சந்திக்கும்.

இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கவனம் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் பக்கம் திருப்பி உள்ளன. அந்த நாடுகள் தங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மறுத்துவிட்டன.

கச்சா எண்ணெய் உற்பத்தியில் ‘பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகளின் அமைப்பு(ஒபெக்)’ மூலம் ரஷியாவுடன் ஒருங்கிணைந்து செயல்படும் மத்திய கிழக்கு நாடுகள், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மறுப்பு தெரிவித்துவிட்டன.

மேலும் ஐ.நா. கூட்டத்தில் நடைபெற்ற ரஷியாவின் படையெடுப்பைக் கண்டிக்கும் தீர்மானத்தை சீனா மற்றும் இந்தியாவுடன் சேர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் புறக்கணித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

related posts