பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.
பணவீக்கத்திற்கு ஏற்ற வகையில் குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் 15.20 டொலர்களாக காணப்பட்ட சம்பளம் 15.65 டொலர்களாக உயர்த்தப்பட உள்ளது.
மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு ஏற்ற வகையில் சம்பளத்தை அதிகரிப்பதாக மாகாண நிர்வாகம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் திகதி தொடக்கம் சம்பள உயர்வு அமுல்படுத்தப்பட உள்ளது.