Home உலகம் உக்ரைன் தலைநகர் கீவ்வில் இன்று இரவு முதல் பொது முடக்கம்

உக்ரைன் தலைநகர் கீவ்வில் இன்று இரவு முதல் பொது முடக்கம்

by Jey

உக்ரைனின் தலைநகர் கீவ் நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வருகின்றன. மேலும், பொதுமக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

உக்ரைன் மீது ரஷியா இன்று 20-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. ஆனால், சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் இன்று இரவு (செவ்வாய்) முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. கீவ் முழுவதும் இன்று இரவு முதல் அடுத்த 36 மணி நேரத்திற்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.

கீவ் நகர் நோக்கி ரஷிய படைகள் நெருங்கி வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும், பதுங்கு குழிகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது

related posts