பிதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உள்ளிட்ட நூற்றுக் கணக்கான கனேடியர்களுக்கு ரஸ்யா தடை விதித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மெலினி ஜோலி, பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் உள்ளிட்ட பலர் இந்த தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
உக்ரேய்னுக்கு ஆதரவளித்த காரணத்தினால் இவ்வாறு ரஸ்யா தடை விதித்துள்ளது.
கனேடியர்களுக்கு எதிரான தடை தொடர்பில் ரஸ்ய வெளிவிவகார அமைச்சு தனது இணைய தளத்தில் அதிகாரபூர்வமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
ரஸ்யா மீது கனடா தொடர்ச்சியாக தடைகளை விதித்து வரும் காரணத்தினால், ரஸ்யாவும் கனடா மீது தடைகளை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேவையற்ற போரை நிறுத்தும் வரையில் கனடா தொடர்ச்சியாக ரஸ்யா மீது தடைகளை விதிக்கும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.