Home உலகம் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் 136வது இடம்.. ?

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் 136வது இடம்.. ?

by Jey

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்பட்டியலில் இந்தியாவுக்கு 136வது இடம் கிடைத்து உள்ளது. 140.66 கோடி மக்கள் தொகையை கொண்ட கணக்கெடுப்பின்படி, கடந்த 2021ம் ஆண்டில் 3.8 புள்ளிகளும், 2020ம் ஆண்டில் 3.5 புள்ளிகளும் நமது நாடு பெற்றிருந்தது.

இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் (2.5 புள்ளிகள்) கடைசிக்கு தள்ளப்பட்டு 149வது இடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே (3.145), ருவாண்டா (3.415), போட்ஸ்வானா (3.467), மற்றும் லெசோதோ (3.512) ஆகியவை கடைசி 5 நாடுகள் வரிசையில் உள்ளன.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் கடந்த 2002ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்காக 149 நாடுகள் கணக்கெடுப்பில் எடுத்து கொள்ளப்படுகின்றன.

10 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் இந்த பட்டியல், மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, சுகாதார வாழ்க்கை, உங்களுடைய சொந்த வாழ்வை முடிவு செய்யும் சுதந்திரம், மொத்த மக்கள் தொகை மற்றும் ஊழல் அளவு ஆகியவை அளவுகோல்களாக கொள்ளப்பட்டு சர்வே செய்யப்படுகிறது. மக்களை நேரடியாக சந்திப்பதன் வாயிலாகவும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளி விபரங்கள் அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப்பட்டு தயார் செய்யப்படுகிறது.

இதில் ஆச்சரியப்படத்தக்க விசயம் என்னவெனில், 2021ம் ஆண்டிற்கான உலகின் முதல் 7 மகிழ்ச்சியான நாடுகள் அனைத்தும் வடஐரோப்பிய நாடுகளாகும்.

இவற்றில், 55.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட பின்லாந்து 7.842 புள்ளிகளுடன் தொடர்ச்சியாக 4வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

தொடர்ந்து டென்மார்க் (7.620), சுவிட்சர்லாந்து (7.571), ஐஸ்லாந்து (7.554), நெதர்லாந்து (7.464), நார்வே (7.392), மற்றும் ஸ்வீடன் (7.363) ஆகியவை உள்ளன.

இந்த பட்டியலில், அமெரிக்கா 16வது இடத்திலும், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் முறையே 15வது மற்றும் 20வது இடத்திலும் உள்ளன. ஸ்பெயின், இத்தாலி ஆகியவை 27, 28 ஆகிய இடங்களை பிடித்துள்ளன. மத்திய கிழக்கு நாடான லெபனான், தென்அமெரிக்க நாடான வெனிசுலா, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் ஆகியவை பட்டியலில் கடைசி இடங்களை பிடித்துள்ளன.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில், நமது அண்டை நாடான பாகிஸ்தான் (4.9 புள்ளிகளுடன்) 103வது இடம் வகிக்கிறது. இதேபோன்று இலங்கை (4.3 புள்ளிகளுடன்) 126வது இடத்தில் உள்ளது.

related posts