Home சினிமா தனது சினிமா வாழ்க்கை பற்றி வித்யாபாலன்

தனது சினிமா வாழ்க்கை பற்றி வித்யாபாலன்

by Jey

தனது சினிமா வாழ்க்கை பற்றி வித்யாபாலன் கூறும்போது, முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடிக்க வைக்காமல் தன்னை ஒதுக்கியதாக குறை சொல்லி இருக்கிறார்.

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் வித்யாபாலன். தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்தார். மறைந்த நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான தி டர்ட்டி பிக்சர் என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

இந்தியில் வித்யாபாலனை மனதில் வைத்தே கதைகளை உருவாக்குகிறார்கள். ஆனாலும் இதுவரை சல்மான்கான், ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன், அக்‌ஷய்குமார் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக அவர் நடிக்கவில்லை. ஆரம்பத்தில் தமிழ் படங்களில் வாய்ப்பு தேடியதாகவும், கதாநாயகிக்கு ஏற்ற தோற்றம் இல்லை என்று ஒதுக்கியதால் இந்திக்கு சென்று முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

நான் முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடிக்கவில்லை. அவர்கள் என்னை ஓரம் கட்டுவதாகவும், நிராகரிப்பதாகவும் உணர்ந்தேன். அவர்கள் ஒதுக்கியதற்காக எனக்கு வருத்தம் இல்லை. நல்ல கதைகள்தான் சினிமாவுக்கு ஆன்மாவை போன்று இருக்கின்றன. எனவே அப்படிப்பட்ட கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தேன். அந்த படங்கள் எனக்கு பெயர் வாங்கி கொடுத்தன. ரசிகர்களும் ஏற்றுக்கொண்டார்கள் என கூறினார்.

திரையுலகில் தனக்கு நடந்த சில மோசமான அனுபவங்களை பற்றியும் அவர் பிரபாத் கபர் என்ற இந்தி நாளிதழுக்கு சமீபத்தில் அளித்த புதிய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். நான் நடிக்க வந்த புதிதில் நடந்த சம்பவங்களை என்னால் மறக்கவே முடியாது. 13 படங்களில் இருந்து நான் நீக்கப்பட்டேன்.

அதில் ஒரு படத்தில் நடிப்பதில் இருந்து தயாரிப்பாளர் என்னை நீக்கி விட்டு, என்னிடம் நடந்து கொண்ட விதம் மறக்க முடியாதது. அவர்கள் என்னிடம் மோசமாக நடந்து கொண்டனர். நான் மிகவும் அசிங்கமாக இருப்பது போன்று உணர வைத்தனர்.

related posts