Home இந்தியா மகாத்மா காந்தி தான் மிகச்சிறந்த இந்து மற்றும் மதச்சார்பின்மையை பின்பற்றியவர்

மகாத்மா காந்தி தான் மிகச்சிறந்த இந்து மற்றும் மதச்சார்பின்மையை பின்பற்றியவர்

by Jey

காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டுகளில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர்.

அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கு மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கபட்டது.

இந்த பயங்கரவாத தாக்குதல்கள், எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறு இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

இதற்கிடையில், காஷ்மீரில் 1990-களில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த 11-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு அரியானா, மத்திய பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரிச்சலுகை வழங்கியுள்ளது.

இந்த திரைப்படம் அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாகியுள்ளது. காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் இந்த திரைப்படம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான குலாம் நபி ஆசாத் நேற்று காஷ்மீரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவில் அரசியல் மிகவும் மோசமடைந்துவருகிறது. சில நேரங்களில் நாம் மனிதர்களா? என்று கூட எண்ணங்கள் தோன்றுகிறது. மகாத்மா காந்தி தான் மிகச்சிறந்த இந்து மற்றும் மதச்சார்பின்மையை பின்பற்றியவர். மதத்தை உண்மையாக யார் பின்பற்றுகிறாரோ அவரே உண்மையான மதச்சார்பற்றவர் ஆவார்.

நாம் அனைவரும் முதலில் மனிதர்கள் அதன்பின்னர் தான் இந்துக்கள், இஸ்லாமியர்கள். பாகிஸ்தானின் மிகப்பெரிய பங்குடன் காஷ்மீரில் பல உயிர்களை பயங்கரவாதம் அழித்துள்ளது. பாதுகாப்பு படையினர், போலீசார், காஷ்மீரி பண்டிட்கள், காஸ்மீரி முஸ்லீம்கள் என பலரை பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர். பலர் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்.

நாம் சமூதாயத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். நான் ஓய்வு பெற்றுவிட்டு சமூக சேவை செய்ய தொடங்கிவிட்டேன் என்று திடீரென உங்களுக்கு தெரியவரும்போது அது பெரிய விஷயமல்ல என்று நான் சில நேரங்களில் நினைக்கிறேன்’ என்றார்.

 

 

 

related posts