Home இந்தியா இந்தியாவின் 35 நகரங்கள் மாசடைந்த நகரங்களின் பட்டியலில்

இந்தியாவின் 35 நகரங்கள் மாசடைந்த நகரங்களின் பட்டியலில்

by Jey

புதுடில்லி உலகில் காற்று மாசு அதிகம் உள்ள தலைநகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 4வது முறையாக முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் காற்று மாசு ஒரு கடுமையாக சுகாதாரப் பிரச்னையாக உள்ளது. உலகின் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஐ.கியூ.ஏர் நிறுவனம், உலகம் முழுவதும் சுமார் 117 நாடுகளை சேர்ந்த 6,475 நகரங்களில் மாசு தரவுகளின் கணக்கெடுப்பை நடத்தியது.

இதில், உலக சுகாதார அமைப்பால் காற்று மாசுபாட்டின் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 93 நகரங்களில் 10 மடங்கு அதிக மாசுபாடு இருப்பது தெரியவந்துள்ளது.

உலக அளவில் அதிக மாசு கொண்ட தலைநகரங்களில் தொடர்ந்து 4வது முறையாக புதுடில்லி முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் வங்கதேச தலைநகர் டாகா உள்ளது.

முதல் 50 இடங்களில் இந்தியாவின் 35 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

related posts