லிபரல் மற்றும் என்.டி.பி கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக ஜக்மிட் சிங் தலைமையிலான என்.டி.பி கட்சி அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 2025ம் ஆண்டு வரையில் லிபரல் கட்சியை ஆட்சியில் நீடிக்கச் செய்யும் நோக்கில் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மருந்துப் பொருள் மற்றும் பல்சுகாதாரம் தொடர்பான விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என லிபரல் கட்சி, என்.டி.பி கட்சிக்கு ஆதரவளிக்கப்படும் என உறுதிமொழி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் இரு கட்சிகளினதும் தலைவர்களும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் தோன்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.