Home கனடா தொலைபேசி வழியான மோசடிகள் குறித்து எச்சரிக்கை

தொலைபேசி வழியான மோசடிகள் குறித்து எச்சரிக்கை

by Jey

தொலைபேசி வழியான மோசடிகள் குறித்து கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹமில்டன் பிராந்திய பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு பணம் கோரும் வகையில் இந்த மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேரப்பிள்ளைகள் அல்லது இளையவர்கள் ஏதேனும் குற்றச் செயலில் சிக்கி கொண்டதாகவும் அவர்களை பொலிஸார் கைது செய்து விட்டதாகவும் அவர்களை பிணையில் விடுதலை செய்ய ஒரு தொகை பணம் தேவைப்படுவதாகவும் தொலைபேசியில் கூறப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

பணம் அனுப்பும் விபரங்களை குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என மோசடிகாரர்கள் கோருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

related posts