Home கனடா றொரன்டோவில் கடுமையான மழை, பலத்த காற்று

றொரன்டோவில் கடுமையான மழை, பலத்த காற்று

by Jey

றொரன்டோவில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றுடனான காலநிலையினால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மழை மற்றும் காற்று காரணமாக ஆயிரக் கணக்கானவர்கள் மின்சாரத்தை இழக்க நேரிட்டுள்ளது.

சில பாதைகள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக றொரன்டோ வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

மணிக்கு 70 கிலோ மீற்றர் என்ற வேகத்தில் காற்று வீசக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரத் தடை குறித்து அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக றொரன்டோ ஹைட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

related posts