ஐரோப்பிய தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கோரிக்க விடுத்துள்ளார்.
உக்ரேய்ன் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தி வரும் ரஸ்யாவிற்கு எதிராக அனைத்து ஐரோப்பிய நாடுகளும் அணி திரள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
உக்ரேய்னிய மக்களின் நிச்சயமற்ற எதிர்காலம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்கு எதிராக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் செய்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களிடம் கோரியுள்ளார்.
ரஸ்யாவிற்கு எதிராக கூடுதல் தடைகள் விதிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.