றொரன்டோ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்செயலாக தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோர்த் யோக்கில் அமைந்துள்ள பெயார்விவ் கட்டடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளதாகவும் உயிராபத்து கிடையாது எனவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.