கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ., தன், 14 வயது மகளுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் அந்த சிறுமியை கிண்டல் செய்துள்ளனர்.
பதின்பருவ பெண்ணும், அவரது தந்தையும் சாலையில் சேர்ந்து செல்லுகையில் மோசமான கிண்டல்களை எதிர்கொள்ளும் நிலை இருப்பது துரதிர்ஷ்டவசமானது’ என, கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை, இளைஞர்களுடன் சண்டையிட்டார்.அப்போது ஒரு இளைஞர், ‘ஹெல்மெட்’டால் சிறுமியின் தந்தையை தாக்கினார்.இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞர் மீது, ‘ஜாமினில்’ வெளி வரமுடியாத கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குற்றவாளி தரப்பில் முன் ஜாமின் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதி, ‘பதின்பருவ பெண்ணும், அவரது தந்தையும் சாலையில் சேர்ந்து செல்லுகையில் மோசமான கிண்டல்களை எதிர்கொள்ளும் நிலை இருப்பது துரதிர்ஷ்ட வசமானது’ என்றார்.
குற்றவாளிக்கு முன் ஜாமின் தர மறுத்த நீதிபதி, விசாரணை அதிகாரி முன் சரண் அடைந்த பின், சட்ட ரீதியாக வழக்கை எதிர்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.