Home இந்தியா போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க அதிரடி நடவடிக்கை தேவை

போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க அதிரடி நடவடிக்கை தேவை

by Jey

தமிழகத்தில், குறைந்தபட்சம் மதுக்கடைகளின் எண்ணிக்கையையாவது குறைக்கவேண்டும்; கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க அதிரடி நடவடிக்கை தேவை,’ என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

செங்கல்பட்டு அருகே அரசுப் பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் சிலர், பஸ்சிலேயே மது அருந்திய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது; விழுப்புரம் அருகே மாணவி ஒருவர் பள்ளி சீருடையில் சாலையில் நடனமாடிய வீடியோவும் பரவி வருகிறது. பள்ளி மாணவ, மாணவியர் மது உள்ளிட்ட போதைப்பழக்கங்களுக்கு அடிமையாவது கண்கூடாகத் தெரிகிறது.

திருப்பூரில் இளைஞர்கள் பலர், போதை பழக்கத்துக்கு அடிமைப்பட்டுள்ளனர். பனியன் நிறுவனங்களில் பணிபுரிவோரில், குடிப்பழக்கத்துக்கு அடிமையான பல இளைஞர்கள், பணிக்கு முறையாகச் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், மாணவப்பருவத்திலேயே நல்லொழுக்கத்திற்கான விதை துாவப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.’

பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன; மாணவியரும், பெண்களும் மதுவுக்கு அடிமையானால், பாலியல் குற்றங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது; இளம் வயதிலேயே பாதை மாறிச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளிக்கல்வி துறை சார்பிலும் ஆலோசனைகள் வழங்கி, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

related posts