Home உலகம் ரஷியாவை எவராலும் இனி தடுத்து நிறுத்த முடியாமல் போகும்

ரஷியாவை எவராலும் இனி தடுத்து நிறுத்த முடியாமல் போகும்

by Jey

கீவ் நகரில் ரஷியப் படைகள் தனது வான் தாக்குதலை மீண்டும் கடுமையாக்கியுள்ளதுடன், அங்கு தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன.’’இவ்வாறான நிலையில், உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பு தொடர்பில் பல ஆண்டுகளுக்கு முன்னமே பாபா வங்கா விளாடிமிர் புதின் குறித்து குறிப்பிட்டுள்ள கணிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாட்டவரான பாபா வங்கா 50 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இயற்கை பேரிடர் மற்றும் போர்கள் ஏற்படுவதற்கு முன்பு அவை பற்றியும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், விளாடிமிர் புதின் குறித்து அவர் குறிப்பிட்டிருந்த கணிப்புகள் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷியாவும் விளாடிமிர் புதினும் உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என பாபா வங்கா குறிப்பிட்டுள்ளார்.

அதில், அனைத்தும் கரையும், பனி போல, ஒன்று மட்டுமே தீண்டப்படாமல் இருக்கும் – விளாடிமிரின் மகிமை, ரஷியாவின் மகிமை என பாபா வங்கா குறிப்பிட்டுள்ளார்

மட்டுமின்றி, ரஷியாவை எவராலும் இனி தடுத்து நிறுத்த முடியாமல் போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்படும் அனைத்தும் அவரால் அப்புறப்படுத்தப்படும், கைப்பற்றப்படுவதை தக்கவைத்துக் கொள்வார், அதனால் உலகஅதிபதியாவார் என பாபா வங்கா குறிப்பிட்டுள்ளார்.

திடின் காலத்தில் மகிமை பெறும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டுமின்றி, மூன்றாம் உலகப் போர், அணு ஆயுதங்கலின் பயன்பாடு தொடர்பிலும் பாபா வங்கா குறிப்பிட்டுள்ளார்.

பாபா வங்கா வெளியிட்டுள்ள கணிப்புகளில் 68 சதவீதம் அளவுக்கு நடந்துள்ளதாக நிபுணர்கள் கூறி வந்தாலும், அவரது ஆதரவாளர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, 85 சதவீதம் அளவுக்கு நடந்தேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாத இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவர் அங்கு, பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கப்படுகிறார். இவர் 50 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவை பலித்தும் உள்ளன, நடந்தும் உள்ளன.

அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார். அதேபோன்று அந்த தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது. அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்று கணித்தார்.

அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார். பின்னர், 2016-ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும் எனவும் கணித்தார். இதைத் தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என கணித்தார், அதுவும் நடந்தது.

இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பை பற்றி பலரும் எதிர்பார்க்கின்றனர். 2019 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இருந்தாலும் பாபாவை பின்பற்றுவோர் அவரது கணிப்பை நம்புகின்றனர்.

தற்போது, ரஷியா உக்ரைன் மீது பயங்கர தாக்குதலை நடத்தியதை அடுத்து, பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று மீண்டும் வைரலாகியுள்ளது.

related posts