ரஷ்யாவுக்கு அஞ்சி பிற நாட்டவர்கள் எங்களுக்கு உதவுவதில் அஞ்ச வேண்டாம். மாஸ்கோவுக்கு பதிலடி கொடுத்திட தைரியமான ஆயுதங்களை வழங்குங்கள். அச்சம் சிலரை கட்டிப்போடுகிறது. ஆயுதங்கள் வரவில்லை என்பதால் உக்ரைனியர்கள் சாகக்கூடாது. இவ்வாறு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
போர் நடந்து வரும் உக்ரைன் நாட்டில் 30 லட்சத்திற்கும் மேலானவர்கள் அகதிகளாக சென்றுள்ளதாக ஐ .நா., புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது.
இவர்கள் உடமைகளை கொண்டு செல்லவே சிரமப்படும் போது பாசமாக வளர்த்த வீட்டு பிராணிகளை பிரிய மனமில்லாமல் பெரும் கவலைக்குள் சிக்கி உள்ளனர். இதனை கண்ட போலந்து நாட்டில் கார்கோவ் நகரில் தன்னார்வலர் தம்பதியினர் வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கென ஒரு முகாம் அமைத்துள்ளார்.
இதில் அகதிகள் பிராணிகளை விட்டு செல்லலாம். இலவசமாக பத்திரமாக பார்த்து கொள்கின்றனர். அதிலும் ரஷ்யா படையினர் உணவு தட்டுப்பாடு காரணமாக நாய், பூனை, எலியை கொன்று சாப்பிட துவங்கி இருப்பதாகவும் பரவுகிற ஒரு தகவல் வீட்டு பிராணி வளர்ப்போரை பெரும் அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ளது.