Home இந்தியா தண்ணீரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜன் கார்

தண்ணீரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜன் கார்

by Jey

நாட்டில், நிலக்கரி பயன்படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறியுள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி, பார்லிமென்ட் கூட்டத்திற்கு ஹைட்ரஜன் காரில் வந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா தன்னிறைவு பெறுவதற்காக தண்ணீரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜன் காரை அறிமுகம் செய்துள்ளோம். மாதிரி திட்டத்தில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் போது, இறக்குமதி குறைவதுடன், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்காக அரசு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில், ஏற்றுமதி துவங்கும். நாட்டில், நிலக்கரி பயன்படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

related posts