பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸிற்கும், வதிவிடப் பாடசாலைகளில் கற்ற முன்னாள் மாணவர்களுக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் வத்திக்கானில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
பூர்வகுடியினப் பிரதிநிதிகள் ஒரு மணித்தியாலம் பாப்பாண்டவருடன் கலந்துரையட உள்ளனர்.
பாப்பாண்டவருடன் இவ்வாறான 15 பூர்வகுடியின பிரதிநிதிகள் பிரத்தியேக சந்திப்புக்களை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கத்தோலிக்க வதிவிடப்பாடசாலைகளில் பூர்வகுடியின சிறார்கள் திட்டமிட்ட அடிப்படையில் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் காம்ப்லூப்ஸில் அமைந்திருந்த வதிவிடப் பாடசாலை வளாகத்தில் அடையாளம் காணப்படதாக 200க்கும் மேற்பட்ட புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பூர்வகுடியின சிறார்கள் கொன்று புதைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் பாப்பாண்டவர் பகிரங்க மன்னிப்பு கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.