எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சமஷ்டி கார்பன் வரி அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்பன் வரி அதிகரிப்பு காரணமாக சில மாகாணங்களில் எரிவாயு விலைகள் உயர்த்தப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சமஷ்டி கார்பன் வரி 25 வீதமாக அதிகரிக்கப்பட உள்ளது.
எரிவாயுவின் விலை ஒரு லீற்றருக்கு 2.2 சதமாக உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
இது ஒரு லீற்றருக்கு சுமார் 11 வீதமாக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ, அல்பர்ட்டா, சஸ்கட்ச்வான் மற்றும் மொனிடோபா போன்ற மாகாணங்களில் எரிபொருள் விலை கூடுதலாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.