கனடாவிற்குள் பிரவேசிக்கும் நூற்றுக் காணவர்களுக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் பிரவேசிப்போர் கட்டாயம் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் நாடு திரும்பியவர்களில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொவிட் தொற்றாளிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 25 வீதமானவர்கள் உருமாற்றம் பெற்ற கொவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
பிரித்தானிய மற்றும் பிரேஸில் போன்ற நாடுகளில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றுக்கள் வீரியமானவை எனவும் அதிக வேகமாக பரவக்கூடியவை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு ஒன்றாரியோ முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.