தி.மு.க., ஆதரவு பேச்சாளர் நாஞ்சில் சம்பத், கவர்னர் தமிழிசை குறித்து ஒருமையில் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.
அவரது பேச்சுக்கு எதிர்ப்பும், கண்டனமும் எழுந்தன. இதுவரை, நாஞ்சில் சம்பத் வருத்தமோ, மன்னிப்போ கேட்கவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் திருப்பூரில் பரதநாட்டிய அரங்கேற்ற விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை பேசியதாவது:
”அவமரியாதை செய்பவர்களை தமிழன்னை பார்த்துக் கொள்வார்,” என, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர்தமிழிசை தெரிவித்தார்.
மேடையில் ஆடியது பெண்கள்; வாழ்த்தியது பெண்; மேடையில் பல பெண்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை இந்த மேடை உணர்த்துகிறது.தமிழுக்கு யாரெல்லாம் மரியாதை கொடுக்கின்றனரோ, அவர்களை தமிழ் வாழ வைக்கும்.அவமரியாதை செய்பவர்களை தமிழன்னை பார்த்துக் கொள்வார்.
சமையல் மேடை மட்டுமல்ல, நடன மேடை, அரசியல் மேடையும் பெண்களுக்கு தேவை. பெண் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும்; எந்த சமூகம் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறதோ, அந்த சமூகம் சிறந்து விளங்கும்.இவ்வாறு அவர் பேசினார்.