Home இந்தியா உலக சுகாதார அமைப்பின் இந்த நடவடிக்கை…..

உலக சுகாதார அமைப்பின் இந்த நடவடிக்கை…..

by Jey

‘கோவாக்சின்’ தடுப்பூசி தயாரிப்பு ஆலையில் உலக சுகாதார அமைப்பு, சுட்டிக்காட்டிய குறைபாடுகளை ஒரு வாரத்திற்குள் சரி செய்ய, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தெலுங்கானாவின் ஹைதராபாதில் இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனம், கோவாக்சின் கோரோனா தடுப்பூசியை தயாரிக்கிறது.

இதற்கிடையே, ஐ.நா., முகமைகள் வாயிலாக கோவாக்சின் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, இதர நாடுகளுக்கு வினியோகிக்கும் பணிகளை நிறுத்துவதாக, உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது.

எனினும், கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை என, தெரிவிக்கப் பட்டது.

இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி தயாரிப்பு ஆலையில், மூன்று குறைபாடுகளை உலக சுகாதார அமைப்பினர் கண்டறிந்துள்ளனர்.

அவற்றை அடுத்த ஒரு வாரத்திற்குள் சரி செய்து, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம், பாரத் பயோடெக் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ‘ஐ.நா., முகமைகளுக்கு நாங்கள் கோவாக்சின் தடுப்பூசிகளை வினியோகிக்கவில்லை. ‘அதனால், உலக சுகாதார அமைப்பின் இந்த நடவடிக்கை எங்களை பாதிக்காது’ என, பாரத் பயோடெக் தெரிவித்து உள்ளது.

 

related posts