கனேடிய பொலிஸார், உக்ரேய்னில் இடம்பெற்று வரும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பான ஆதாரங்களை திரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரேய்ன் மீது ரஸ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல்வேறு போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக உக்ரேய்ன் குற்றம் சுமத்தியுள்ளது.
ரஸ்ய படையெடுப்பு காரணமாக உக்ரேய்னிலிருந்து தப்பி வரும் பிரஜைகளிடமிருந்து கனேடிய பொலிஸார் தகவல்களை திரட்டி வருகின்றனர்.
சமஷ்டி போர்க் குற்றச் செசயல் திட்டத்தின் அடிப்படையில் ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்களை இலகுவில் பகிரும் நோக்கில் கனேடிய பொலிஸார் இணைய தளமொன்றையும் ஆரம்பித்துதுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.