அமெரிக்கா சென்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இருவரும் அந்நாட்டு ராணுவம் மற்றும் வெளியுறவு அமைச்சர்களுடன் பேச்சு நடத்த உள்ளனர்.
டில்லியில் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று கூறியதாவது: வரும்,11ம் திகதி ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இருவரும் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்கின்றனர்.அவர்கள், அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின், வெளியுறவு அமைச்சர் அன்டோனி பிளின்கன் ஆகியோரை சந்தித்து பேசுவர்.
நால்வரும் இந்திய – அமெரிக்க பரஸ்பர வெளியுறவு கொள்கை, ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதிப்பர்.இந்நிகழ்ச்சி தவிர, ஜெய்சங்கர் தனியே அன்டோனி பிளின்கன், அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளுடன் பேசஉள்ளார். இவ்வாறு அவர்கூறினார்.