ஓடுதளத்தில் சென்ற போது விமானம் இரண்டாக உடைந்தது. விபத்து நடந்த போது, அதில் விமானி மற்றும் துணை விமானி மட்டுமே இருந்தனர். இருவருக்கும் காயம் ஏற்படவில்லை
சரக்கு விமானம் இரண்டாக உடைந்த நிலையில், மீட்பு பணிகள் நடந்து மூடப்பட்ட விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.
மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாசர்வதேச விமான நிலையத்தில் தனியார் சரக்கு விமானம் நேற்று காலை 10:00 மணிக்கு தரையிறங்கியது.
.
இதையடுத்து அங்கு விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. விபத்து ஏற்பட்ட விமானத்தை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. மீட்பு பணிகள் முடிந்து, மாலை 3:30 மணிக்கு விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.
இதனால் அங்கு இறங்க வேண்டிய 57 சரக்கு விமானங்கள் தாமதமாக தரையிறங்கின; 8,500 பயணியர் பாதிக்கப்பட்டனர்.