உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு 100 மில்லியன் டாலர் கூடுதல் மனிதாபிமான ஆதரவை அறிவித்துள்ளது.
சமூக ஊடக நிதி திரட்டல் நிகழ்வின் போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
“உணவு, தண்ணீர், தங்குமிடம் அல்லது மருத்துவ உதவி எதுவாக இருந்தாலும் — இந்த நேரத்தில் உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்” என்று ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்புடன் கனடா உக்ரைனுக்கு மனிதாபிமான உதவியாக 245 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.
அதில், 145 மில்லியன் டாலர் ஐக்கிய நாடுகளின் அமைப்புகள், செஞ்சிலுவை சங்கம் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.