Home இந்தியா தமிழக சட்டசபையில் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம்

தமிழக சட்டசபையில் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம்

by Jey

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந் திகதி 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 19-ந் திகதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 21-ந் திகதி முதல் 24-ந் திகதி வரை 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

துறைகள் வாரியாக மானியக் கோரிக்கைகளை, விவாதம் நடத்தி நிறைவேற்றுவதற்காக கடந்த 6-ந் திகதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று (திங்கட்கிழமை) உயர் கல்வி, பள்ளி கல்வித்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியதும், முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து கேள்வி நேரம் முடிந்ததும், உயர் கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேசுகிறார்கள். இறுதியாக தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட உள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.

related posts