முகக் கவச பயன்பாட்டை தொடருமாறு ஒன்றாரியோ மாகாண பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் கய்ரான் மூர் கோரியுள்ளார்.
ஒன்றாரியோ பிரஜைகள் பொதுவான உள்ளக இடங்களில் தொடர்ந்தும் முகக் கவசம் அணிய வேண்டியது அவசியமானது என கோரியுள்ளார்.
பீ.சீ.ஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் ஆறாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு சில சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாணத்தில் நாளாந்த கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 120000 மாக அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.