பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் இம்ரான் அரசு ஆட்சியை இழந்தது. இதனால், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டெடுப்பு, அந்நாட்டு பார்லி.,யில் நேற்று மதியம் நடந்தது.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீப் பொது மேடையில் பேசுகையில், மைக்குகளை உடைக்கும் அளவிற்கு உணர்ச்சிபொங்க பேசும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப், வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஆவார். அவருக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்தன. ஓட்டெடுப்பில் 174 பேரின் ஆதரவுடன் நாட்டின் 23வது பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய பிரதமராக தேர்வான ஷெபாஸ் ஷெரீப், பஞ்சாப் மாகாணத்தில் மூன்று முறை முதல்வராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில், ஷெபாஸ் ஷெரீப் பொது மேடைகளில் பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
பேசிக்கொண்டிருக்கும் போதே, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவரின் முன்னே இருக்கும் சில மைக்குகளையும் உடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்டவர் தான் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என உலகம் முழுவதும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.