அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரண்டு சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இனவெறி தாக்குதலாக இருக்கலாம் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், ஒருவரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிச்மண்ட் ஹில் பகுதியில் இந்த சம்பவம் நேற்று(ஏப்.,12) நடந்துள்ளது. அதிகாலை நேரத்தில், சீக்கியர் ஒருவர் நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அங்கு வந்த இரண்டு பேர் கம்பியால் தாக்கியதுடன், தலைப்பாகையையும் அகற்றியுள்ளனர். அதே இடத்தில் 10 நாட்களுக்கு முன்னர் மற்றொரு சீக்கியர் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள நியூயார்க் அட்டர்னி ஜெனரல், சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம் எனக்கூறியுள்ளார்.
இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டனத்திற்குரியது. விசாரணை நடத்தி வரும் போலீசாருடன் தொடர்பில் உள்ளோம் எனக்கூறியுள்ளார்.