முகக் அணியுமாறும், பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளுமாறும் கனேடியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய பிரதம சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சுகாதார வழிகாட்டல்கள் எவ்வாறு அமைந்திருந்தாலும் பரவாயில்லை, அனைவரும் முகக் கவசம் அணிந்து கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.
பெருந்தொற்று தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மீண்டும் கோவிட் தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்கு அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.