அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் கொலம்பியா நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மக்கள் அதிகம் கூடியிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதுபற்றி தலைமை காவல் அதிகாரி ஹோல்புரூக் கூறும்போது, துப்பாக்கி சூட்டில் ஒருவரும் உயிரிழக்கவில்லை. இந்த சம்பவத்தில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. 2 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்து உள்ளனர் என கூறியுள்ளார். இதனால், மொத்தம் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. அவர்களுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்கள் அனைவரும் 15 முதல் 75 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர் என அவர் கூறியுள்ளார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.