இலங்கை இராணுவம் வன்முறையை ஏற்படுத்தத் தயாராகி வருவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் மக்களை அடக்குவதற்குத் திட்டமிடுவதாகவும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நபர்கள் சுமத்தும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும், பொய்யான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் இராணுவம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சில ஆர்வமுள்ள தரப்பினர் தவறாக வழிநடத்தும் மற்றும் புனையப்பட்ட விளக்கங்களை அளித்து, ஆதாரமற்ற, மற்றும் ஆத்திரமூட்டும் குற்றச்சாட்டுகளைப் பிரச்சாரம் செய்வதன் மூலம் தீவு முழுவதும் பணியாற்றும் இராணுவத்தையும் அதன் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்களையும் இழிவுபடுத்தவும் களங்கப்படுத்தவும் முயற்சிப்பதாக கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
படையினர் “வன்முறையை ஏற்படுத்த” முயற்சிப்பதாகவும், “தாக்குதல் பயிற்சியில்” ஈடுபட்டுள்ளதாகவும் ஊகிக்கிறார்கள், இது முற்றிலும் தவறானது. புனையப்பட்ட மற்றும் அடிப்படையற்றது.
தெளிவாகப் பார்த்தால், இன்றுவரை எந்த ஒரு படையினர் கூட அந்த பதட்டமான சூழ்நிலைகளில் ஈடுபடவில்லை என்றுள்ளனர்.