Home உலகம் செய்தி தொகுப்பாளருக்கு வட கொரியா அதிபரின் பரிசு

செய்தி தொகுப்பாளருக்கு வட கொரியா அதிபரின் பரிசு

by Jey

வட கொரியாவில், 50 ஆண்டுகள் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய ரி சுன் ஹி, 78, என்பவருக்கு, அதிபர் கிம் ஜாங் உன், ஆடம்பர வீடு ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார்.கிழக்காசிய நாடான வட கொரியாவில், ரி சுன் ஹி என்பவர், 50 ஆண்டுகளாக, அரசு ‘டிவி’யில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

1994ல், தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தாவும், நாட்டின் முன்னாள் அதிபருமான கிம் இல் சங்கின் மறைவு செய்தி முதல், 2006ல் முதல்முறையாக அணு ஆயுத சோதனை செய்யப்பட்டது வரை, அவர் பல முக்கிய நிகழ்வுகளை செய்திகளாக வாசித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டிற்காக ரி சுன் ஹி ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, அவருக்கு ஆடம்பர சொகுசு வீடு ஒன்றை, அதிபர் கிம் ஜான் உன் பரிசாக வழங்கி உள்ளார்.அந்த வீட்டை, கிம்முடன் ரி சுன் ஹி பார்வையிடும் புகைப்படங்களை, வட கொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

 

related posts