Home உலகம் வெளியான வதந்திக்கு கூகுள் மேப் விளக்கம்

வெளியான வதந்திக்கு கூகுள் மேப் விளக்கம்

by Jey

கூகுள் மேப் குறித்த தற்போது சமூக வலைதள பக்கத்தில் போலி கணக்கு ஒன்றில் வெளியாகி இருந்த வதந்தி குறித்து கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கூகுள் மேப் ஜிபிஎஸ் செயற்கைக்கோள்கள் மூலமாக உலகின் எந்த பகுதியையும் துல்லியமாக காட்டக்கூடியது.

வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கு பயன்படும் கூகுள் மேப் செயலி மூலமாக பலர் பயனடைந்து வருகின்றனர். உலகின் எந்த மூலையை வேண்டுமானாலும் கூகுள் மேப் செயற்கைக்கோள் காட்சி மூலமாக பார்க்க முடியும்.

ஆனால் உலகில் எங்காவது போர் உள்ளிட்ட சர்ச்சைக்குள்ளான விஷயங்கள் நடந்து கொண்டு இருந்தால் அந்த பகுதியை கூகுள் மேப் தலைமை (பிளர்) மங்கலாக மாற்றுவது வாடிக்கை.

உக்ரைன் நாட்டில் கடந்த 50 நாட்களாக ரஷ்யப் படைகள் போர் புரிந்து வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து சமூக வலைதளப் பக்கத்தில் போலி கணக்கில் ஓர் கருத்து பதிவிடப்பட்டிருந்தது. ரஷ்யாவில் கனரக ஆயுதங்கள் நிறைந்து இருப்பதால் ரஷ்யாவின் பகுதிகள் சிலவற்றை கூகுள் மேப் செயலி மங்கலாக மாற்றியுள்ளது என்று பதிவிடப்பட்டது.

மேலும் சித்தரிக்கப்பட்ட ஓர் புகைப்படமும் இந்த பதிவோடு வைரல் ஆகி வந்தது. இதனையடுத்து கூகுள் நிறுவனம் இந்த போலி பதிவுக்கு பதில் அளித்தது. ரஷ்யாவின் எந்த பகுதியையும் கூகுள் மேப் செயலி மறைக்கவோ அல்லது பிளர் செய்யவோ இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

related posts