வாகன விபத்துச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் றொரன்டோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
வாகனத்தைச் செலுத்திய சாரதியும் அவருடன் பயணம் செய்த மூன்று பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஸ்பாடினா மற்றும் கிங் வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகன விபத்தை மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்ற நிலையில் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.