Home இலங்கை இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கம்

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கம்

by Jey

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ள நிலையில் அது தங்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட விளைவுகள் என Annonymus எனப்படும் சைபர் ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிடும் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.gov.lk தங்கள் செயற்பாடுகளால் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக மக்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதாக ஹெக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஊழல் அரசியல்வாதிகளின் செயல்களை ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியில் இருந்து பல்வேறு இணையத்தயங்களில் ஊடுருவி வெளியிடுவதாக உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஹெக்கர் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அரசாங்கத்தின் இயந்திரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்துவதாக ஹெக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கமைய, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளமும் நேற்று காலை செயலிழந்திருந்த நிலையில், அது மீளமைக்கப்பட்டுள்ளது.

அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த Annonymus ஹேக்கர்கள் நேற்று இலங்கையின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களையும் உகாண்டாவின் அரசாங்க இணையத்தளங்களையும் அணுக முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் இன்று மாலை 6 மணிக்கு ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பதனையும் வெளியிடவுள்ளதாக Annonymus காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

related posts