தமிழகத்தில் பல இடங்களில் கடந்த இரு நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் வேளையில், இந்த மின் தடை மக்களை பரிதவிக்க வைத்தது.
இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென தடைபட்டது என விளக்கமளித்தார்
இந்நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது ;
தமிழகத்தில் செயற்க்கையாக மின் பற்றாக்குறையை திமுக அரசு ஏற்படுத்துகிறது .தமிழகத்தில் போதிய அளவில் நிலக்கிரி கையிருப்பு உள்ள நிலையில் தமிழகத்தில் மின் பற்றாக்குறை என கூறுவது வினோதமாக உள்ளது .
2023 க்குள் தமிழக மக்கள் மின் நிலையத்தையே தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்