Home இந்தியா ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,681 பேருக்கு தொற்று; 14 பேர் பலி

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,681 பேருக்கு தொற்று; 14 பேர் பலி

by admin

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 8,681 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 4,679 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் மற்றும் தொற்று பாதித்த 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெள்ளிக்கிழமை மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 8,681 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் சேர்த்து இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்தம் எண்ணிக்கை 4,44,194 -ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் தொற்றிலிருந்து 3,80,400 பேர் மீட்கப்பட்டுள்ளனர், சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 61,698 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் இருந்து 4,948 பேருக்கும், ஊள்ளூரில் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்து 3,733 பேருக்கு தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஏப். 29 வரை 1,00,86,656 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் பணிபுரியும் கரோனா சுகாதாரப் பணியாளர்கள், நிபுணர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஒடிசா அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

இதற்கிடையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஏப்ரல் 25 ஆம் தேதி கரோனா தொற்றுக்கு எதிராக 18 முதல் 44 வயதுக்குள்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என அறிவித்தார்.

இந்த தடுப்பூசிக்காக மாநில அரசு ரூ.2,000 கோடி செலவிடுவதாக மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

related posts