இந்திய மாணவர்கள் பாகிஸ்தான் நாட்டு கல்வி நிறுவனங்கள் படித்த பட்டங்கள் செல்லாது எனவும் வேலைவாய்ப்பு கிடைக்காது என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அண்மையில் அறிவித்தது. அதேபோல், தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் (ஏஐசிடிஇ) இத்தகைய அறிவிப்பை வெளியிட்டது.
இந்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பாகிஸ்தான் கடும் அதிருப்தியையும் வருத்தத்தையும் வெளியிட்டுள்ளது.
தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிடுள்ள அறிக்கையில், “ இந்திய பல்க்கலைக்கழக மானியக்குழுவின் அறிவிப்புக்கு பாகிஸ்தான் கடும் அதிருப்தியை தெரிவிக்கிறது.
பாகிஸ்தான் மீதான வன்மத்தின் காரணமாக இந்திய அரசு எந்த கூச்சமும் இன்றி மாணவர்கள் தங்கள் விருப்பபடி தரமான கல்வியை பெற முடியாதபடி தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்திய அரசிடம் நாங்கள் இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளோம். இந்தியாவின் இத்தகைய ஒருதலைபட்சமான விவரிக்க முடியாத நடவடிக்கைக்காக உரிய பதில் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உள்ளது” என்று தெரிவித்துள்ளது